fbpx

#Alert..!! 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை  கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

#Alert..!! 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

#Alert..!! 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

23.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

Chella

Next Post

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…!! 46 பேர் பலி..!!

Mon Nov 21 , 2022
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவை சுற்றி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய ஜாவா என்ற பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் முற்றிலும் இடிந்து […]

You May Like