fbpx

Alert..!! ’அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்’..!! – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Alert..!! ’அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்’..!! - வானிலை ஆய்வு மையம்

மேலும், தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் ஓரளவு மலை குறைவாக இருந்தாலும் மாலை இரவு நேரங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை’..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Fri Oct 14 , 2022
வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை […]

You May Like