ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது.
இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி பெற்றவர்கள் தான்.
ஆனால், ஒருபோதும் ஒருவர் மீது ஒருவர் வளர்ச்சி குறித்து பொறாமை கொண்டதே இல்லை.ஆலியா மற்றும் ரன்பீர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா படத்திற்கு கர்ப்பமாக இருந்த நிலையில் விளம்பரப்படுத்தி வந்தனர். இத்தகைய நிலையில், ஆலியாவின் பிரசவ காலமும் நெருங்கிவிட்டது.
இன்று அவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.