நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பயணிக்க முடியும் என்ற கோட்பாடு அல்லது கருத்தாக்கமே காலப்பயணம் அதாவது டைம் ட்ராவல் (Time Travel) என்று அழைக்கப்படுகிறது. காலத்தை கடக்க உதவும் மெஷின்களை உருவாக்கி அதிலிருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டைம் ட்ராவல் மற்றும் டைம் மெஷின் குறித்தும் தற்போது வரை யாரும் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டவில்லை.

இந்நிலையில் டைம் ட்ராவல் செய்து வந்ததாக கூறும் நபர் ஒருவர் இந்த ஆண்டு சில வினோதமான நிகழ்வுகள் நடக்கும் என்று கணித்துள்ளார்.. அவரின் கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஈனோ அலாரிக் (Eno Alaric) என்ற அந்த நபர், தான் 2671 ஆம் ஆண்டிலிருந்து தான் வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னை ஒரு டைம் டிராவலர் என்று கூறிக்கொள்ளும் ஈனோ இந்த ஆண்டு பல விசித்திரமான நிகழ்வுகளை சந்திக்கும் என்றும் கணித்துள்ளார். @theradianttimetraveller என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இருக்கும் ஈனோ, எதிர்காலம் குறித்த தகவல்களை வழங்கி உள்ளார்.. அதன்படி, 2023-ம் ஆண்டு வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என ஈனோ தெரிவித்துள்ளார். பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்படும் என்றும் கணித்துள்ளார்..
ஈனோவின் சில முக்கிய கணிப்புகள் :
- மார்ச் 23: பூமியைக் காப்பாற்ற 8,000 பேர் வேற்றுகிரகவாசிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
- மே 15: 750 அடி உயர சுனாமி சான் பிரான்சிஸ்கோவைத் தாக்கும். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறக்க நேரிடும்
- ஜூன் 18: 7 பேர் ஒரே நேரத்தில் வானத்திலிருந்து விழுவார்கள்
- ஆகஸ்ட் 18: தோல் புற்றுநோய்க்கான தீர்வை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள்
- டிசம்பர் 3: பல நோய்களைக் குணப்படுத்தும் ஒரு படிகம் கண்டுபிடிக்கப்படும்
- டிசம்பர் 29: ஸ்டெம் செல்கள் மூலம் புதிய உறுப்புகள் வளர ஆரம்பிக்கும்
இதே போல் பல ஆண்டுகளுக்கு முன்பே, சமூக ஊடக பயனர் ஒருவர் 2023 ஆம் ஆண்டில், யாராலும் கணிக்க முடியாத அசாதாரணமான ஒன்று நிகழும் என்று கூறியிருந்தார்.. இந்த ஆண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் என அவர் கணித்துள்ளார். தன்னை ஒரு டைம் ட்ராவலர் என்று கூறும் அவர் , 2858 ஆம் ஆண்டு வரை பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்… இவர் டிக்டாக்கில் Darkness Time Travel என்ற பெயரில் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.