fbpx

’நீங்க போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்’..!! ’SIMPLY WASTE பட்ஜெட்’..!! இறங்கி அடித்த எடப்பாடி பழனிசாமி..!!

மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,
ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், “FAILURE மாடல் அரசின் விளம்பர மாடல்” முக.ஸ்டாலின் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், “உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.

தங்கள் பட்ஜெட் குறித்து நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் வரும் இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை படித்துக் காண்பிப்பாரா? உலகிலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே, மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். பட்ஜெட் பற்றி மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், “ரூ” போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டதாக சினிமா வசனம் பேசுகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான். 72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் முக.ஸ்டாலின் தான். இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் “தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்” என்பது மக்களின் கருத்து. மொத்தத்தில் இந்த பட்ஜெட்.. SIMPLY WASTE..!” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : இந்திய விமான நிலைய ஆணையத்தில் 90 காலியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

English Summary

He talks about the budget hit because he put “Roo” in the movie dialogue.

Chella

Next Post

ஓடிப்போய் திருமணம்..!! வீட்லயும் ஏத்துக்கல..!! குழந்தையை வளர்க்க முடியாததால் தம்பதி செய்த செயல்..!! சென்னையில் அதிர்ச்சி

Mon Mar 17 , 2025
A love-married couple who were unable to raise a child and gave it to another woman and disappeared has taken place in Chennai.

You May Like