fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு…!அக்டோபர் மாதம் இந்த 16 நாட்களுக்கு வங்கிகள் அனைத்தும் விடுமுறை…!

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் அக்டோபர் மாதத்தில் 16 நாட்களுக்கு மூடப்படும். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை வகுக்கிறது, அதன்படி வங்கிகளுக்கு வருடாந்திர விடுப்புகள் விடப்பட்டு வருகிறது. இருப்பினும், வெவ்வேறு காரணத்தினால் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே அடங்கும். அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே, வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது. எனவே, பணி நிமித்தமாக உங்கள் வங்கிக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், உங்கள் பிராந்தியத்தின்படி அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறையை உறுதிப்படுத்த உங்கள் உள்ளூர் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

விடுமுறை பட்டியல்

அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. 12 அக்டோபர் அன்று நரக சதுர்தசி பல மாநிலங்களில் விடுமுறையாக இருக்கும். அக்டோபர் 14-ம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.அக்டோபர் 15 ஞாயிறு அன்று வாங்கி விடுமுறை. மேலும் அக்டோபர் 18 அன்று கடி பியு என்பதால் அசாம் மாநிலத்தில் விடுமுறை.

அக்டோபர் 19 அன்று சம்வத்சரி திருவிழா என்பதால் குஜராத் மாநிலத்தில் விடுமுறை. 21 அக்டோபர் அன்று துர்கா பூஜை வங்கி விடுமுறை. 22 துர்கா பூஜை, 23 மகா நவமி, 24 விஜய தசமி என்பதால் வங்கிகள் விடுமுறை. 28 அக்டோபர் அன்று சரஸ்வதி பூஜை என்பதால் விடுமுறை. அதே போல 31 அக்டோபர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உணவில் அதிக உப்பை சேர்த்துக் கொள்ளும் இந்தியர்கள்..! ஆபத்து அதிகம்..! நிபுணர்கள் கூறுவது என்ன..?

Sat Sep 30 , 2023
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, அதிகமாக இந்தியர்கள் உப்பை எடுத்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் போர்ட்போலியோ இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 8 கிராம் உப்பு எடுத்து கொள்கின்றனர். இது உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட உப்பு அளவான 5 கிராமை விட அதிகமானது. தேசிய தொற்றா நோய் கண்காணிப்பு மையம் சார்பில் 3,000 பேரின் சிறுநீர் மாதிரியில் உள்ள சோடியம் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தினர். உலக அளவில் […]

You May Like