விழா ஒன்றில் பேசிய திண்டுக்கல் லியோனி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி சசிகலாவோட கால்ல விழுந்தார் பாருங்க. அந்த மெத்தடை இதுவரைக்கும் உலகத்துல எந்த அரசியல்வாதியும் பின்பற்றியது கிடையாது. என்கிட்ட படிச்ச மாணவர்களே என்னைய பார்த்து கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவான். கால தொட்டு, கண்ணுல ஒத்திக்குவான். சில பேர் ரெண்டு காலையும் தொட்டு கண்ணுல ஒத்திக்குவான். இன்னும் ரொம்ப பெரியவங்களா இருந்தா நெடுஞ்சாகனைய கால்ல விழுவான். இந்த மூணு மெத்தட் தான் இருக்கு.
ஆனா, 4 சேருக்கு நடுவுல மலை பாம்பு மாதிரி அப்படி நவுந்து நவுந்து சசிகலாவுடைய கால் எங்க இருக்கு? என தேடி போய் கால்ல விழ ஒரு புதிய மெத்தட கண்டுபிடிச்சு, இந்த உலகத்திற்கு ”அடிமைகளின் அரசன்” என்று அறிமுகப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. அவரு சொல்றாரு உதயநிதிக்கு கட்டம் சரியில்லன்னு. எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு தான் கட்டம் சரியில்லை.
AIADMK அப்படின்றது அந்த கட்சி பெயர். அதுக்குள்ளே எங்க DMK இருக்கு. AIADMK-வுல அந்த DMK-வ மட்டும் எடுத்துட்டா AIA-ன்னு தான் இருக்கும். அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ”அகில இந்திய அடிமைகள்”. DMK எடுத்துட்டா நீங்க எல்லாம் இந்தியாவினுடைய அடிமைகள். இதில் அவருக்கு மாநாட்டில் பட்டம் வேற… புரட்சித்தமிழன்… வெட்கமா இல்ல? சத்தியராஜ்க்கு கொடுத்த பட்டத்தை இன்னொருத்தருக்கு கொடுத்த பட்டத்தை வெட்கம் கெட்ட தனமாக தனது பட்டமாக மாற்றி கொண்டார் எடப்பாடி பழனிசாமி“ என கடுமையாக விமர்சித்தார்.