fbpx

மது பிரியர்கள் கவனத்திற்கு…! 16.01.2023 அன்று மது கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

திருவள்ளுவர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 16.01.2023 அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ அனைத்து மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட உத்தரவில்; தமிழ்நாடு அரசால்‌ வருகின்ற 16.01.2023 திங்கட்கிழமை திருவள்ளுவர்‌ தினம்‌ அன்று மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமெனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌.எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கிவரும்‌ மதுபானக்கூடங்கள்‌, டாஸ்மாக்‌ மதுபானக்கடைகள்‌ (எப்‌.எல்‌.11) மற்றும்‌ டாஸ்மாக்‌ மதுபானக்கடைகளுடன்‌ இணைந்துள்ள மதுபானக்கூடங்கள்‌ அனைத்தும்‌ 16.01.2023 திங்கட்கிழமை அன்று மூடப்பட வேண்டும்.

மேலும்‌ அன்றைய தினம்‌ மதுபானம்‌ விற்பனை செய்யக்கூடாது எனவும்‌ அறிவுறுத்தப்படுகிறது.இதனை மீறி விற்பனை செய்பவர்கள்‌ மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நியூஸ் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!! இனி இதை எல்லாம் ஒளிபரப்பக் கூடாது..?

Tue Jan 10 , 2023
தொலைக்காட்சிகளில் விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செய்தி தொலைக்காட்சிகளில்  அலைவரிசைகளில் . இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் புகைப்படங்கள் வீடியோக்கள், ரத்த காட்சிகள் , பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரக்கமின்றி அடிக்கப்படுவது, ஆசிரியரால் […]

You May Like