fbpx

இவர்களுக்கு எல்லாம் கொரோனா தடுப்பூசி தேவையில்லை.. WHO வெளியிட்ட புதிய அறிவிப்பு..

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது..

இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு மறுபரிசீலனை செய்துள்ளது.. அதன்படி, ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி தேவைப்படாமல் இருக்கலாம்.. ஆனால் வயதான, அதிக ஆபத்துள்ள மக்கள், கடைசி தடுப்பூசிக்குப் பிறகு 6 முதல் 12 மாதங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.. மேலும் கடுமையான நோயின் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கு புதிய பரிந்துரைகள் முன்னுரிமை அளிக்கின்றன.

வயதானவர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.. இவர்களுக்கு கடைசி டோஸுக்கு 6 அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு கூடுதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இணை நோய்கள் இல்லாத ஆரோக்கியமான பெரியவர்கள் மற்றும் இணை நோய்உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோருக்கு முதன்மைத் தொடர் மற்றும் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் அதே நேரம், 6 மாதங்கள் முதல் 17 வயது வரையிலான ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. இவர்களுக்கு தடுப்பூசியை பரிந்துரைக்கும் முன் நோய் சுமை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு நாடுகளை வலியுறுத்தியது. எனினும் கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர்கள் எல்லா வயதினருக்கும் பாதுகாப்பானவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்த பரிந்துரைகள் வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 3,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதே நேரம் இந்தியாவில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன..

Maha

Next Post

விஜய் டிவியிலிருந்து விலகி ஜீ தமிழில் இணைந்த மிர்ச்சி செந்தில்..!! சீரியல் குறித்து புதிய அறிவிப்பு..!!

Wed Mar 29 , 2023
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அதன் இரண்டாம் சீசன் என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர் முடிந்தபிறகு அவர் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவரது அடுத்த தொடர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் ஒரு புது […]

You May Like