தமிழக அரசை பொருத்தவரையில் அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அப்படி தமிழக அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்றால் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம் என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படுவது வழக்கம்.
அரசு துறைகளில் அன்றாடம் அனைவருக்கும் தேவையான முக்கிய துறையை தான் மருத்துவத்துறை. அப்படிப்பட்ட துறையின் சில மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. இதன் காரணமாக, பல நேரங்களில் பல மருத்துவமனைகளில் பல உயிர்கள் பரிதாபமாக போகும் சம்பவம் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இது போன்ற சம்பவம் சமீபத்தில் கூட அரியலூர் மாவட்டம் செந்துறை நகராட்சியில் நடைபெற்றது.
அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது ஒரு உத்தரவைப் போட்டிருக்கிறது. அதாவது அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் நிச்சயமாக பணியில் எடுக்க வேண்டும் என்றும் மாற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பணியில் கட்டாயமாக இருப்பது அவசியம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.