fbpx

தமிழ்நாடு முழுவதும்..!! அரசுப் பேருந்துகளில் வரும் 27ஆம் தேதி முதல்..!! திடீர் நடவடிக்கையால் பொதுமக்கள் பீதி..!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை முதல் வங்கிகளில் கொடுத்து ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அதிலும் குறிப்பாக விரைவு போக்குவரத்து தொலைதூர பேருந்துகளில் அதிக அளவில் இரண்டு நாட்களாக 2000 ரூபாய் நோட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி கோட்ட நிர்வாகம் கிளை மேலாளர் மூலமாக நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதில் நிர்வாகத்திற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. அதனால் வருகிற 27ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்க வேண்டாம். அதற்காக அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் நிலைமையை எடுத்து கூறி பெறுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி எஸ்.இ.டி.சி. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சேலம், கும்பகோணம், விழுப்புரம், மதுரை, கோவை, கோட்ட அதிகாரிகள் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என நடத்துனர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Chella

Next Post

BreakingNews: கழிவு நீர் மரணங்களை தடுக்க உடனே நடவடிக்கை…..! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!

Mon May 22 , 2023
தமிழ்நாட்டில் கழிவுநீர் மரணங்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் களங்கமாக விளங்குகிறது. ஆகவே அது நவீன இயந்திரங்களை கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை எதிர்வரும் 4 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like