fbpx

தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்காது!!

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரையில் இன்று மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்று கூட உள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய பிரகடன தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள், வணிகர்கள் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read More: Abortion | 18 வது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம்.!! சட்டத்தை மாற்றி அமைத்த டென்மார்க் அரசு.!!

Rupa

Next Post

மே 17-ம் தேதி வரை யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சிறை...! கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sun May 5 , 2024
சவுக்கு சங்கரை மே 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் […]

You May Like