fbpx

நாடு முழுவதும் இன்றும், நாளையும்..!! கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை..!!

நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை எதிர்கொள்வதற்காக 2 நாள் மருத்துவ ஒத்திகையை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஏப்ரல் 10) மற்றும் நாளை (ஏப்ரல் 11) ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒத்திகை நடைபெற உள்ளது.

இந்த ஒத்திகையின் போது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்கள், ஆக்ஸிஜன் கையிருப்பு அளவு, மருந்துகள் கையிருப்பு ஆகியவை சோதித்து அறியப்படும். இதற்கிடையே, கொரோனா பரவல் திடீரென அதிகரித்துவிட்டால், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

Earthquake..!! அந்தமானை அடுத்தடுத்து 6 முறை உலுக்கிய நிலநடுக்கம்..!! அச்சத்தில் மக்கள்..!!

Mon Apr 10 , 2023
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் அடுத்தடுத்து 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் நேற்று மதியம் 1.19 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் பதிவானது. இரண்டாவது முறையாக மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் மூன்றாவது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவின் கடல் பகுதியில் 5.3 ரிக்டர் […]

You May Like