சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிருந்தார். இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.