fbpx

சூடானில் இருந்து இந்தியா திரும்பிய 117 பயணிகளுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி…! தனிமைப்படுத்த உத்தரவு…!

மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு முயற்சியில் சூடானில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பயணிகளை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மீட்டு வரும் பயணிகளுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 1,191 பயணிகள் வந்துள்ளனர். அதில் 117 பயணிகள் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடாததால் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளும் அறிகுறியற்றவர்களாக இருந்தால் 7 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு விமான நிலைய சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் மத்திய அரசு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இலவச உணவு வசதியுடன் தங்குமிடம் வழங்கப்படுகிறது.

முதல் குழுவில் 360 பயணிகள் டெல்லிக்கு வந்தனர், இதில் எவரும் தனிமைப் படுத்தப்படவில்லை, அதைத் தொடர்ந்து இரண்டாவது விமானம் ஏப்ரல் 26 அன்று 240 பயணிகளுடன் மும்பைக்கு வந்தது. அதில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தடுப்பூசி சான்றிதழ் சரிபார்த்த பிறகு இருவர் விடுவிக்கப்பட்டனர். மூன்றாவது விமானம் நேற்றுமுன்தினம் பெங்களூரு வந்தடைந்தது. 360 பயணிகளில் 47 பேர் ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். தடுப்பூசி சான்றிதழ் சரிபார்த்த பிறகு 3 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

மேலும் ஐந்து பயணிகளின் சரிபார்ப்பு நடந்து வருகிறது. நான்காவது விமானம் நேற்று மாலை டெல்லிக்கு 231 பயணிகளுடன் வந்தடைந்தது. அதில் 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஐந்தாவது விமானம் இன்று இரவு 367 பயணிகளுடன் டெல்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 320 பயணிகளுடன் கூடுதல் விமானம் இன்று காலை 10:30 மணிக்கு பெங்களூருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

நோட்...! மாதம் தோறும் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை...! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...!

Sun Apr 30 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நபர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகைவழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ பெறப்படுகின்றன. பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ அதற்கும்‌ மேலான […]

You May Like