இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 12 தேதி வரவுள்ளது. இதனை கொண்டாட மக்கள் கடந்த வாரம் முதலில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்தபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் வழக்கம்போல செயல்பட்டது. அதேபோல நான் பாக்கணும் தெரியுமா ரேஷன் கடைகள் செயல்படும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கு நவம்பர் 13 மற்றும் 25-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கடந்த 3-ம் தேதியும், நாளையும் வேலை நாட்களாக இருப்பதால் அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் தீபாவளி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு பதிலாக இந்த ஆண்டு பணமாக ரூ.490 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்களது வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும். இதனால் 3.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.