fbpx

கடைசி வாய்ப்பு… தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித்தொகை…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ‘www.dge.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் இன்று மாலைக்குள் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Vignesh

Next Post

மிகப்பெரிய இழப்பு... பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் உடல் நலக்குறைவால் காலமானார்...!

Fri Sep 9 , 2022
பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் பிர்ஜு சா காலமானார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் பிர்ஜு சா காலமானார், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர். அவருக்கு வயது 48. 1994-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 1993-ம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 19 […]

You May Like