fbpx

கொரோனா அதிகரிப்பு.. அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அட்வைஸ்..

கொரோனா அதிகரிப்பு குறித்து விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தி உள்ளார்..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுவத்து குறித்தும், நோய் தொற்றை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது..

அப்போது கொரோனா அதிகரிப்பு குறித்து விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தி உள்ளார்.. சுகாதார தயார் நிலை தொடரும் ஏப்ரல் 8,9 தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.. ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்…

Maha

Next Post

அரசு இ - சேவை மையங்கள் மூடப்படுகிறதா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Fri Apr 7 , 2023
தனியார் இ – சேவை மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கிய பின் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ – சேவை மையங்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு இ – சேவை மைய ஊழியர்கள் கூறுகையில், தற்போது 511 அரசு இ- சேவை மையங்களும், 383 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களும் இருக்கிறது. இந்த மையங்களில் மொத்தமாக 1,110 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், […]

You May Like