fbpx

மிக கவனம்… Tnpsc Group Exam எழுத்தும் தேர்வர்களுக்கு இது அனைத்தும் கட்டாயம்… இல்லை என்றால் நீங்க தேர்வு எழுத முடியாது…!

குரூப் 4 தேர்வர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய ஆதார்கார்டு. பாஸ்போர்ட், லைசன்ஸ்,வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது.

தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி. 10-ம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் முறையில் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்;பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

தேர்வர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். அதே சமயம் 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக ஹால் டிக்கெட் எடுத்து வரவேண்டும். அதேபோல் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார்கார்டு. பாஸ்போர்ட், லைசன்ஸ்,வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும். தேர்வில் விடைகளை குறிப்பிட கருப்பு நிற பால்பாயின்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் விடை தெரியாத வினாக்களுக்கு கடைசியாக E விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் தாளில் தவறாமல் தங்களது பதிவு எண்ணை கட்டாயமாக எழுத வேண்டும். அதேபோல் ஓஎம்ஆர் தாளில் தங்களது இடது கை பெருவிரல் ரேகையை வைக்க வேண்டும்.

Also Read: பெற்றோர்களே கவனம்… குழந்தை தொழிலாளர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!

Vignesh

Next Post

28-ம் தேதி இந்த 4 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

Sun Jul 24 , 2022
சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் 28 ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. இதல் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொள்கின்றனர். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய […]

You May Like