fbpx

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் உடன் கூட்டணி..!! டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பு..!!

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பாட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்திருந்தேன். விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன் போன்றவற்றையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்கிறது.

தற்போது தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் கடுமையாக விமர்சிப்பதை குறைத்துள்ளோம். வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். திருவள்ளுவர் விவகாரத்தில் ஆளுநரின் செயல் அந்த பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இது போன்று நடவடிக்கைகள் ஆளுநர் செய்வது தவறு. அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி தற்போது யோசிக்கவில்லை. ஓபிஎஸ் உடன் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவு அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பரபரப்பு: "இது அண்ணாமலை ஆட்டம்.." பதற்றத்தில் திமுக.! 2ஜி ஊழல் ஆர்.ராசா ஆடியோ ரிலீஸ்.!

Wed Jan 17 , 2024
டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுக அரசின் ஊழல் மற்றும் சொத்து குறிப்பு குறித்த விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 2ஜி ஊழல் சம்பந்தமான ஆடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் புது புயலை கிளப்பி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. […]

You May Like