fbpx

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை‌…! முழு விவரம்

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதில் 50% வருங்கால வைப்புத் தொகை உட்பட பணப்பலனின் ஒரு பகுதியை வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு முறையே ரூ.5.8 கோடி, ரூ.3.6 கோடி, ரூ.4.3 கோடி, ரூ.8 கோடி, ரூ.3.2 கோடி, ரூ.2.9 கோடி வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

English Summary

Allocation of Rs.38 crore to provide cash benefits to transport pensioners

Vignesh

Next Post

நடுக்கடலில் அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

Mon Aug 12 , 2024
Atrocity in the Mediterranean! Sri Lankan Navy attack on Tamil Nadu fishermen!

You May Like