fbpx

யானை பாகன்களுக்கு வீடு கட்ட ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

யானை பாகன்களுக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது..

இந்தியாவில் உருவான The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.. முதுமலையை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும், ரகு, அம்மு என்ற யானைகளுக்கும் இடையே இருந்த ஆழமான அன்பையும் பாசத்தையும் அந்த ஆவணப்படம் விவரித்திருந்தது.. இந்நிலையில் The Elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தனர்.. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தத முதலமைச்சர், இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி கௌரவித்தார்..

இந்நிலையில் யானை பாகன்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்” கோவை, நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.. யானை பராமரிப்பாளர்கள் வசிக்க தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த வீடுகள் கட்ட நிதியுதவி வழங்கப்படும்.. முதுமலை தெப்பக்காடு, ஆனைமலை, கோழிகமுத்து யானை முகாமில் உள்ள 91 யானை பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்..

ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. கோவையில் அடிப்படை வசதிகளுடன் ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும்.. அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம், சுற்றுசூழல் வளாகம் ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற எச் ராஜா கைது…..! திருமாந்துறை சுங்கச்சாவடியில் பரபரப்பு….!

Wed Mar 15 , 2023
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பாக மத்திய அரசின் நிதிநிலை சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் காவல்துறையினரின் தடையையும் மீறி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா நேற்று மாலை காரின் மூலமாக திண்டிவனம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் […]

You May Like