fbpx

முன்பே எனக்கு தெரியும் ஆனாலும் நான் விளையாட விரும்பினேன், மனம் திறந்த அஸ்வின்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் இறுதிப்போட்டியில் பங்கேற்காதது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின், இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் விளையாடி அணிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக அளிக்க வேண்டும் என்பதில் தான் ஆர்வமாக இருந்ததாக குறிப்பிட்டதோடு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இதற்கு முன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு அதிக விரும்பத்தோடு இருந்தேன். ஏனென்றால் நாங்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு என்னுடைய பெரிய பங்களிப்பு இருந்தது என நம்புகிறேன். கடந்தமுறை இங்கிலாந்தில் நடைபெற்ற 2021 இறுதிப் போட்டியில் கூட நான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாகவே பந்து வீசினேன். 2018-19 முதல் இப்போதுவரை, எனது வெளிநாட்டு பந்துவீச்சு அருமையாகவே இருந்துள்ளது. அணிக்கான வெற்றியில் நான் என் வேலையை சரியாக செய்திருந்தேன். இதையும் நான் ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பார்வையில் இருந்து தான் பேசுகிறேன் என்று அஸ்வின் பேசியுள்ளார்.

ஆனால் உண்மையில் பிரச்சனை என்னவென்றால் இதுபோன்ற ஆடுகளங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் விளையாடுவதற்கு, நான்காவது இன்னிங்ஸ் மட்டும் தான் ஏதுவாக இருக்கும். நான்காவது இன்னிங்ஸ் என்பது போட்டியின் மிக முக்கியமான அம்சமாகும். அதில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக விளையாட முடியும். எல்லாவற்றையும் தாண்டி இது முற்றிலும் அணியின் மனநிலையை சார்ந்த விஷயம். என்னால் பங்கேற்க முடியாமல் போனாலும், என்னுடைய அணி வெற்றிபெற வெளியில் இருந்தும் என்னால் முடிந்த பங்களிப்பை நான் எப்போதும் வழங்குவேன்” என்று பேசியுள்ளார்.

எல்லாவற்றையும் தாண்டி, இறுதிப்போட்டியில் 48 மணி நேரத்திற்கு முன்பே நான் வெளியேறப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். என்னால் ஒரு வாய்ப்பையோ அல்லது உலகக்கோப்பை பட்டத்தையோ பெறமுடியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் எனது முழு இலக்கானது தோழர்களுக்கு என்னுடைய பங்களிப்பதை உறுதிசெய்து, பட்டத்தை வெல்ல அவர்களுக்கு உதவவேண்டும் என்பது. ஏனெனில் அணியில் நானும் ஒரு பங்கு என்பது எனக்கு தெரியும்” என்று அவர் மேலும் கூறினார்.

Maha

Next Post

பொருட்களுடன் இடித்து தள்ளப்பட்ட கடைகள் - காவல்துறை குவிப்பு

Fri Jun 16 , 2023
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எதிரொலி சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி. பொருட்களுடன் இடித்து தள்ளப்பட்ட கடைகள் – காவல்துறை குவிப்பு. தென் மாவட்டத்தில் பிரபல மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பனகல் சாலை முழுவதிலும் சாலை ஓரங்களில் அதிகளவிற்கு சாலையோர கடைகள் வைக்கப்பட்டதன் காரணமாக […]
ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படும்..! உத்தரவாதம் தேவையில்லை..! விண்ணப்பிப்பது எப்படி?

You May Like