இது குறித்து மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள. சுற்றறிக்கையில், “மாணவர்கள் தங்கள்பள்ளிக் காலத்தை முடித்த பின்பும்,அவர்களது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் தொடர்ச்சியாக நம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உடன் பயணிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுவதை எண்ணி பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை பற்றியும், அவர்கள் தொடர்ச்சியாக பள்ளியின் மீது ஈடுபாடும், பொறுப்பும் உள்ள நபர்களாக பயணிப்பதை பற்றியும் மண்டல அளவில் பள்ளியின் மிக முக்கிய பங்குதாரர்களான முனைப்புடன் வந்த தலைமை ஆசிரியர்களுடன் குழு கலந்துரையாடல்’ கடந்த மே 23, 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும்,அனுபவங்களையும் மிக ஆரோக்கியமானமுறையில் கலந்துரையாடி இந்தமுயற்சிக்கு உத்வேகமும்,நம்பிக்கையையும் அளித்த முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், அனைத்துதலைமை ஆசிரியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடுபள்ளிக்கல்வித் துறை சார்பில் பாராட்டும்,நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.