ஹிமாச்சலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்நடிகர் அஜீத்குமார் ரசிகர் ஒருவரிடம் விளையாட்டாகா .. ’’ நான் கொலை காரனா , கொள்ளைகாரனா ’’ என கேட்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.
உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்குமார் .. ஹிமாசலபிரதேசத்தில் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணத்தை தொடர்ந்து வருகின்றார். அப்போது கோவையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ’சார் நான் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றேன் ’’ என அவரை சந்தித்து பேசினார்.. இதற்கு பதில் அளித்த நடிகர் அஜித்குமார். ’’ என்னை தேடிட்டு இருக்கீங்களா ? நான் என்ன கொலைகாரனா , கொள்ளைக்காரனா ’’ என விளையாட்டாக கேட்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு அடுத்தடுத்த இருசக்கர வாகனத்திலேயே பயணித்து வருகின்றார்.