fbpx

பிரம்மிக்க வைக்கும் ராமர் கோயில் கட்டுமானம்..!! இரும்பு, சிமெண்ட் என எதுவும் கிடையாது..!! 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்..!!

அயோத்தி ராமர் கோயில் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலையின் கலவையாகும். இது பல நூற்றாண்டுகள் நீடிக்கும் கட்டுமானத்துக்கான அறிவியலை உள்ளடக்கியது. இதுபற்றி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கோயில் கட்டுமானக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், “இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இஸ்ரோ தொழில்நுட்பங்களும் கோயிலில் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர்.

இதில் கட்டமைக்கப்பட்ட பரப்பளவு சுமார் 57,000 சதுர அடி. இது மூன்று மாடிகளை கொண்டது. இரும்பின் ஆயுட்காலம் 80-90 ஆண்டுகள் மட்டுமே. எனவே, கோயிலில் இரும்போ, எஃகு-வோ பயன்படுத்தப்படவில்லை. கோயிலின் உயரம் 161 அடி. இது குதுப் மினாரின் உயரத்தில் 70 சதவீதமாகும்” என்றார். அயோத்தி ராமர் கோயில் ‘நாகர் ஷைலி’ அல்லது வட இந்திய கோயில் கட்டிடக்கலைகளின்படி சந்திரகாந்த் சோம்புராவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரது குடும்பம் 15 தலைமுறைகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கோயில் கட்டிடங்களை வடிவமைத்து வருகிறது.

இதுகுறித்து சந்திரகாந்த் சோம்புராவ் கூறுகையில், “கட்டிடக்கலையின் வரலாற்றில், இந்தியாவில் மட்டுமல்ல, பூமியில் எந்த இடத்திலும் இதுவரை காணப்படாத அரிய, தனித்துவமான அற்புதமான படைப்பாக ஸ்ரீ ராமர் கோயில் இருக்கும்” என்றார். ராமர் கோயில் கட்டுமான திட்டப் பணியில் ஈடுபட்ட ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார் ராமன்சர்லா கூறுகையில், “மிகச் சிறந்த தரமான கிரானைட், மணல் மற்றும் பளிங்கு ஆகியவை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் சிமென்ட், சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்படவில்லை.

Chella

Next Post

'சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் பாஜக’..!! அட்டாக் செய்த அமைச்சர் சேகர்பாபு..!!

Sat Jan 20 , 2024
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் தூய்மை பணி மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில், கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தார். மேலும், அவர் செல்லும் ராமர் கோயில்களில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் கோயிலில் சுத்தம் […]

You May Like