fbpx

Samsung நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு..!! உடலை கண்காணிக்கும் ’கேலக்ஸி ரிங்’..!! விலை எவ்வளவு தெரியுமா..?

நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரியன் நிறுவனமான ‘சாம்சங்’ செல்போன் தயாரிப்பு நிறுவனம், தற்போது புதிதாக சாம்சங் ‘கேலக்ஸி ரிங்’ (Samsung Galaxy Ring) என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்துள்ளன.

இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன என்பது தான் கூடுதல் சிறப்பாகும்.

Read More : Record | ’யாரு சாமி இவரு’..!! 26 ஆண்டுகளில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியர்..!! எங்கு வேலை செய்கிறார் தெரியுமா..?

Rupa

Next Post

Holiday | குட் நியூஸ்..!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Wed Mar 13 , 2024
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், நாளை மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான விழா […]

You May Like