Record | ’யாரு சாமி இவரு’..!! 26 ஆண்டுகளில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியர்..!! எங்கு வேலை செய்கிறார் தெரியுமா..?

26 ஆண்டுகள் பணியில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியரின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே வேலைக்கு செல்பவர்களுக்கு வார இறுதி நாள் விடுமுறை எப்போது வரும் என்று தான் காத்துக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமின்றி, சமீப காலமாக வாரத்தின் விடுமுறை நாட்களை அதிகரிப்பது, வேலை நாட்களை குறைப்பது போன்ற விவாதம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில், ஊழியர் ஒருவர் தனது 26 ஆண்டுகள் பணி அனுபவத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக ‘India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாது ஞாயிற்றுக் கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் பணியாற்றி வந்துள்ளார். துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Dwarikesh Sugar Industries Ltd) நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றும் தேஜ்பால் சிங் என்பவர் தான் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இந்நிறுவனத்தில் இவர், 1995ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003ஆம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார். ஆண்டுதோறும் 45 நாட்கள் விடுமுறையை நிறுவனம் அளித்தாலும் இவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். மனைவி, இரண்டு தம்பிகள் மற்றும் நான்கு குழந்தைகள் என பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் தேஜ்பால் சிங், ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததில்லை என்று கூறப்படுகிறது.

Read More : Salary | இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கு சென்றால் அதிக சம்பளம் கிடைக்கும் தெரியுமா..? தமிழ்நாட்டில் எவ்வளவு..?

Chella

Next Post

Samsung நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு..!! உடலை கண்காணிக்கும் ’கேலக்ஸி ரிங்’..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Wed Mar 13 , 2024
நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரியன் நிறுவனமான ‘சாம்சங்’ செல்போன் தயாரிப்பு நிறுவனம், தற்போது புதிதாக சாம்சங் ‘கேலக்ஸி ரிங்’ (Samsung Galaxy Ring) என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்துள்ளன. இந்த […]

You May Like