fbpx

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தல் அசத்தும் ரஹானே

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஜிங்கியா ரஹானே டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 13வது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.  உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னின்ஸில்  ஆஸ்திரேலியாவிற்கு விளையாடும் போது இந்த சாதனையை எட்டினார். 
இந்திய அணியின் ரஹானே தனது முதல் டெஸ்ட் போட்டியை கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான போட்டியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ரன்னும் எடுத்தார். அதன் பின்னர் தனக்கு கிடைத்த டெஸ்ட் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய ரஹானே மிகச்சிறப்பாக ஆடி வருகிறார். குறிப்பாக இந்திய மண்ணில் சிறப்பாகவும் வெளிநாட்டு மண்ணில் மிகச் சிறப்பாகவும் விளையாடி வருகிறார். 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த ரஹானே உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடியதால், இந்திய அணியில் காயம்டைந்த வீரரான ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட 512 நாட்களுக்குப் பின்னர் களமிறங்கியுள்ள ரஹானே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். இக்கட்டான சூழலில் களமிறங்கி அரைசதம் கடந்த இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 
மொத்தம் 83 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ரஹானே, 141 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 5 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். மேலும், இவர் டெஸ்ட் போட்டியில் இதுவரை 12 சதங்களும் 26 அரைசதமும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 188 ரன்கள் ஆகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ரஹானே டெஸ்ட்டில் தனது 5 ஆயிரமாவது ரன்னை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 49.73 ஆக உள்ளது. 

Maha

Next Post

திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவி

Fri Jun 9 , 2023
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் வந்த யுவஸ்ரீ  என்ற மாணவி செமஸ்டர் தேர்வு எழுதினார். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ. 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார். மாணவிக்கு (ஜூன் 9) இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு […]

You May Like