AMAZON PAY: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் நிதித் தொழில்நுட்பப் பிரிவான அமேசான் பே சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து(RBI) நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் பேமெண்ட் அக்ரிகேட்டருக்கான உரிமத்தை பெற்றிருக்கிறது.
பிப்ரவரி 20ஆம் தேதி அன்று அமேசான் பே செயலியின் மூலம் கட்டணங்களை செலுத்தும் பேமெண்ட் அக்ரிகேட்டராக செயல்படுவதற்கான அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அமேசான் பே செயலியில் இனி இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
வணிகர்கள் மற்றும் கஸ்டமர் களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அவர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த உரிமம் எங்களது விநியோக பணிகளை மேலும் வலுப்படுத்தும். இந்தியா முழுவதிலும் தொழில் புரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் புதுமையான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் இந்த லைசன்ஸ் எங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது என அமேசான் பேய் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் ஏற்கனவே ப்ரீபேமென்ட் ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (பிபிஐ) உரிமத்தை கொண்டுள்ளது. இது அமேசான் பே செயலியில் வாலட் சேவைகளை வழங்க அனுமதிக்கிறது.
2024 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து ஜோமாட்டோ ஜஸ்ட் பே டிசென்ட்ரோ எம்ஸ்வைப் ஜோகோ மற்றும் ஸ்ட்ரைப் உள்ளிட்ட பத்து நிறுவனங்களுக்கு பேமெண்ட் அக்ரிகேட்டர் உரிமத்தை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது.
பேமெண்ட் அக்ரிகேட்டர் உரிமத்தின் மூலம் வாடிக்கையாளரிடமிருந்து பணங்களைப் பெற்று அதனை வணிகர்களுக்கு கட்டண சேவையை வணங்குவதற்கான அங்கீகாரத்தை அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து பேமெண்ட் அக்ரிகேட்டர்கள் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்தினை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு அதற்குரிய வணிகர்களின் கணக்கிற்கு செலுத்த வேண்டும்.