fbpx

‘அமேசான் ப்ரைம்’ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! அதிகரிக்க இருக்கும் மாத கட்டணம்.! வெளியான புதிய அறிவிப்பு.!

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வருகை இவற்றால் ஓடிடி தளங்களின் வருகையும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, சோனி லைவ் போன்ற ஓடிடி தளங்கள் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றை உயர் தொழில்நுட்ப தரத்தில் மக்களுக்கு வழங்கி வருகிறது.

இவற்றில் அமேசான் ப்ரைம் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஓடிடி தளமாகும். இவற்றில் மாத சந்தா மற்றும் வருட சந்தா முறையில் திரைப்படங்கள் மற்றும் இணையதள தொடர்களை பார்க்கலாம். இனி வருகின்ற மாதங்களில் இவற்றின் சந்தா அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை காணும் போது அவற்றிற்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யும் புதிய திட்டத்தை அமேசான் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்களை காண்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Post

'Artificial Intellgence' தொழில்நுட்பத்தை தடை செய்யும் 25% நிறுவனங்கள்..!! 'ப்ரைவசி' குறைபாடுகள் காரணமா.? பரபரப்பு அறிக்கை.!

Tue Jan 30 , 2024
பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ‘AI’ எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை தடை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது . மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் பிரைவசி மற்றும் தகவல் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக ஜெனரேட்டிவ்  ‘AI’ தொழில்நுட்பத்தை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதாகவும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் 27% பேர் ‘AI’ தொழில் நுட்ப பயன்பாட்டை தற்காலிகமாக […]

You May Like