தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பேரக் குழந்தை பிருத்வி ஆகாஷ் அம்பானியின் 2ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு திருமணமான, இஷா அம்பானிக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, முகேஷ் அம்பானி – நீதா அம்பானி ஜோடியின் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், மகள் வழி பேரக் குழந்தைகளை பிரம்மாண்டமாக வரவேற்ற முகேஷ் அம்பானியின் குடும்பம், தற்போது மூத்த பேரனின் வாரிசான பிருத்வி ஆகாஷின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளது.
மும்பையில் உள்ள ஜியோ கார்டனில், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தாவும் தங்கள் மகன் பிருத்வியின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.