fbpx

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தம்…! மத்திய அரசு கால அவகாசம்…!

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி கீழ் வணிக முத்திரை விதிகள் தொடர்பான திருத்தங்களை அது அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்கள் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் முறையே ஜனவரி மற்றும் ஜூலை முதல் தேதிகளில் அமலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் உற்பத்தி தொடர்பான தரவுகளை வழங்குவதற்கும் கொள்முதல் குறித்த முடிவுகளை எடுக்க நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011-ல் திருத்தம் செய்து மாற்றியமைக்கப்பட்ட காலக்கெடுவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தத் திருத்தங்களை சுமூகமாக மேற்கொள்ள ஏதுவாக, முத்திரை சீட்டுகள் விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஜனவரி 1 அல்லது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் 180 நாட்கள் கால இடைவெளியில் அமல்படுத்தப்படும் இத்தகைய அணுகுமுறை வர்த்தக செயல்பாடுகளுக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Amendment to Stamp Duty under the Legal Weights Act

Vignesh

Next Post

தமிழகத்தில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சம் ஆக அதிகரிப்பு....!

Thu Jan 30 , 2025
The number of government vacancies in Tamil Nadu has increased to 6.50 lakhs.

You May Like