fbpx

திடீரென தீப்பிடித்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம்!. 172 பயணிகளின் நிலை என்ன?. வைரலாகும் வீடியோ!

Plane Fire: டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்வெர் சர்வதேச விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், விமான நிலையத்தில் இருந்த தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் 1006 பாதை மாற்றப்பட்டு டென்வெர் விமான நிலையத்தின் வேறொரு ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்.ஏ.ஏ.) தெரிவித்தது.

இது குறித்து எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரமாக தரையிறங்கியதோடு டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டதும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறவனத்தின் விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது. அதன்பிறகு, விமானத்தில் இருந்த 172 பயணிகள், ஆறு பணியாளர்கள் என அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.” “பணியாளர்கள், விமான நிலைய குழு மற்றும் அவசர பாதுகாப்பு படையினரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் அதிவேக பணி காரணமாக அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: வணிகர்களுக்கு மீண்டும் ஆப்பு வைக்கும் மத்திய அரசு..!! UPI, RuPay பரிவர்த்தனைக்கு MDR கட்டணம்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

American Airlines plane suddenly catches fire! What is the condition of 172 passengers? Video goes viral!

Kokila

Next Post

’இனி வீடியோ கால் அழைப்பை எடுப்பதற்கு முன்பே இதை செய்யலாம்’..!! SCAM-இல் தப்பிக்க சூப்பர் வழி..!! வாட்ஸ் அப் வெளியிட்ட புது அப்டேட்..!!

Fri Mar 14 , 2025
The company is reportedly testing the option to turn off the camera before making a WhatsApp video call.

You May Like