fbpx

அப்ப ராஷ்மிகா தானா..? ரிலேஷன்ஷிப்பை கன்ஃபார்ம் பண்ண விஜய் தேவரகொண்டா..!

vijay devrakonda rashmika

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்வதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஜோடியின் உறவு பற்றி பல ஊகங்கள் இருந்தபோதிலும், இருவரும் காதலில் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், தற்போது விஜய் தேவரகொண்டா பிரபல ஆங்கில் இதழுக்கு அளித்த பேட்டியில் தனது ரிலேஷன்ஷிப் நிலையை உறுதிப்படுத்தினார்.

அந்த பேட்டியில், “எனக்கு 35 வயதாகிறது; நான் தனியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா?” என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்தார். அவரிம் இதற்கு முன்பு அவர் தனது சக நடிகை உடன் டேட்டிங் செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு  அவர் ஆம் என்று பதிலளித்தார்

சில எதிர்பார்ப்புகளுடன் வருவதால் தனது காதல் நிபந்தனையற்ற காதல் அல்ல என்றும் விஜய் தேவரகொண்டா கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “ காதலிப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், நேசிப்பது என்னவென்று எனக்குத் தெரியும். எனக்கு நிபந்தனையற்ற காதல் தெரியாது, ஏனென்றால் என் காதல் எதிர்பார்ப்புகளுடன் வருகிறது, எனவே என் காதல் நிபந்தனையற்றது அல்ல. எல்லாமே மிகையாக காதல் மயமாகிவிட்டதாக உணர்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

திருமணம் பற்றிய கருத்துக்களும், திரை வாழ்க்கையில் அதன் குறிப்பிடத்தக்க தாக்கம் பற்றி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் “ பெண்களுக்கு இது மிகவும் சவாலானது. திருமணம் என்பது தொழிலில் தலையிட வேண்டியதில்லை  இருப்பினும், இது பெண்களுக்கு கடினமானது. பெண்கள் பார்க்கும் வேலையை பொறுத்து இது மாறும்” என்றும் அவர் கூறினார்.

அந்த பேட்டிய தொடர்ந்து பேசிய விஜய் தேவரகொண்டா “ நான் முதலில் டேட்டிங் செல்ல விரும்புவதில்லை. வலுவான நட்பை உருவாக்க வேண்டும் என்பது எனது விரும்பு. ஒருவரை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட பின்னரே அவருடன் டேட்டின் செல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த நிலையில் இந்த ஜோடியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அப்போது முதலே இந்த ஜோடி டேட்டி செய்வதாக தகவல்கள் வெளிவர தொடங்கின. மேலும் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்த போட்டோக்கள் வதந்திகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த சூழலில் தற்போது விஜய் தேவரகொண்டா தான் சிங்கிள் இல்லை என்று கூறியிருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.

இதனிடையே விஜய் தேவரகொண்டா தற்போது VD 12 என்ற பெயரிடப்பட்ட படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மறுபுறம், ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டார். இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி பெரிய திரைக்கு வரவுள்ளது. மேலும் அவர் விக்கி கவுஷலுக்கு ஜோடியாக சாவா படத்தில் நடித்து வருகிறார்..

Read More : விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இந்த முறையும் எஸ்கேப் ஆன தனுஷ்..!! என்னதான் பிளான்?

English Summary

Amit Dating Rumors Vijay Devera Konabrim His Relationship With Rashmika Mandanna

Rupa

Next Post

ஜியோ, ஏர்டெல்-க்கு செக் வைக்கும் எலான் மஸ்க்.. விரைவில் நாடு முழுவதும் ஸ்டார்லிங்க் சேவை..!!

Thu Nov 21 , 2024
How Elon Musk's Starlink Satellite Internet could transform India and challenge Jio, Airtel

You May Like