fbpx

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பு…!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த குழு விசாரிக்கும்.மணிப்பூரில் நடந்த வன்முறை, அது பரவியதற்கான காரணங்கள் குறித்தும், பொறுப்பான அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆணையம் விசாரிக்கும்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், இந்த விசாரணை ஆணையத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.ஆணையத்தின் முதல் அமர்வு நடைபெறும் தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், அது தனது அறிக்கையை கூடிய விரைவில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும். ஆணையத்தின் தலைமையகம் இம்பாலில் செயல்படும்.

Vignesh

Next Post

அதிக பென்ஷன் பெற விருப்பமுள்ளவர்கள் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Mon Jun 5 , 2023
EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு EPFO உறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பென்ஷன் பெற இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து அடுத்த 20 நாட்களுக்குள் உடனடியாக செலுத்த வேண்டும் என […]

You May Like