fbpx

நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா -ரோடு ஷோவில் பங்கேற்பு!

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (ஏப்.,12) தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.,12ம் தேதி மாலை 3:05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா, அங்கிருந்து சிவகங்கைக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார். அங்கு மாலை 3:50 மணிக்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் 5 மணிக்கு கோட்டை பைரவர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை திரும்புகிறார். அதனைத்தொடர்ந்து, மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து 2 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு 7:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.

மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Next Post

”இந்தியாவிலேயே மிகவும் மோசமான எம்பி யார் என்றால் அது ஆ.ராசாதான்”..!! அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

Wed Apr 10 , 2024
இந்தியாவிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்த பிரதமர் மோடி பிரச்சார மேடைக்கு வருகை தந்தார். பாஜக சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் […]

You May Like