fbpx

Amit Shah | மக்களே..!! அமித்ஷாவின் காரில் இதை நோட் பண்ணீங்களா..? அட இதுலயுமா..? அப்படினா கன்பார்ம் தான்..!!

மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மார்ச் 2-வது வாரத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் அதற்கு முன்னதாகவே சிஏஏ சட்டத்தின் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமித்ஷாவின் ‘DL1CAA 4421’ என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்வதை பார்க்க முடிகிறது. “CAA-க்கான விதிமுறைகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன் CAA விதிகள் அறிவிக்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய எதிர்ப்புகள் எழுந்தன. மதத்தின் அடிப்படையில் இது பாரபட்சமானது என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : OPS | ’வசமாக சிக்கிய ஓபிஎஸ்’..!! ’வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

Good News | உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.6,000 வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!!

Fri Mar 1 , 2024
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது. […]

You May Like