தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார்? என்பதை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநயாக கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளை இறுதி செய்யவும் அமித்ஷா சென்னை வந்துள்ளார். 2 நாட்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டிற்கான அமித்ஷாவின் பயணம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றும் இது ஒரு தோல்வி பயணமாகவே அமைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்தப்போகும், மாநில தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதே அமித் ஷாவின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில், நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக்க டெல்லி தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. அதேசமயம், தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமியை தலைவராக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அமித் ஷா சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நயினார் நாகேந்திரன் மனுதாக்கல் செய்யவுள்ளார். எனவே, புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பை அமித்ஷாவே வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read More : டிடிவி தினகரனுக்கு திடீர் நெஞ்சுவலி..? மருத்துவமனையில் சிகிச்சை..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!