அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு குழு கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து நிலை நாட்டிட போராடி வரும் நமது கட்சியின் செயற்குழு கூட்டம் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் ஜூன் 7ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தினகரனை சந்தித்து.. இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். ஜூன் 7ம் தேதி நடக்கும் செயற்குழு கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .