கும்பகோணம் அருகே சூரியனார் கோயிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள சிலைகளை காணவில்லை என அக்கோயிலின் ஆதீனமாக இருந்த மகாலிங்க பண்டார சந்நிதி புகார் அளித்துள்ளார். சிலைகள், மரகத கற்களை காணவில்லை என கர்நாடக பெண்ணை திருமணம் கொண்டு ஆதீனத்தை விட்டு வெளியேறிய மகாலிங்க பண்டார சந்நிதி புகார் அளித்துள்ளார்.
மேலும், ஆதீனத்தின் சாவியை ஒப்படைக்கவும், பாதுகாப்பு கோரியும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அந்த புகாரில், “கடந்தாண்டு பாபு என்கிற ரத்தினவேல் அப்போதைய சூரியனார் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் சில சமூக விரோதிகள் தூண்டுதலின் பேரில் என் மீது போலியாக விமர்சனம் செய்து மானபங்கப்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அனுப்பி விட்டார்கள். இது ஏன் என்று அப்போது எனக்கு புரியவில்லை.
தற்போது ஊர் மக்கள் தான் கூறி அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது, 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த மரகதங்கள், படிகங்கள் ஆகியவற்றை நான் இல்லாத நேரத்தில் அதை எடுத்துச் செல்லவே இந்த நாடகத்தை அரங்கேறியுள்ளனர். எனவே, தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென” அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Read More : நாளை ஹோலி பண்டிகை..!! மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடிய இஸ்லாமியர்கள்..!! ஆயிரக்கணக்கில் குவிந்த போலீஸ்..!!