fbpx

தாயின் அலட்சியத்தால் உயிரிழந்த 18 மாத கைக்குழந்தை…!

தற்போது மக்களிடையே அலட்சியம் அதிகரித்துவிட்டது. அந்த அலட்சியம் அதிகரிப்பால் பல துன்பங்கள் நேர்கின்றனர்.

அந்த துன்பங்கள் விவரம் அறிந்தவர்களுக்கும், தவறு செய்தவர்களுக்கும் நேர்ந்தால் கூட பரவாயில்லை என்று சொல்லலாம்.

ஆனால் அந்த தவறுகள் எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

யாரோ ஒரு சிலர் அலட்சியத்தால் செய்யும் ஒரு சில தவறுகளால், எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகள் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள்.

சில சமயங்களில் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையையும் கூட தங்களுடைய அலட்சியத்தால் பெற்றோர்கள் தொலைத்து விடுகிறார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. பிகார் மாநிலம் ஜெகனபாத் அருகே இரு தரப்பினருக்கும் இடையே நிற தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தகராறு அந்தப் பகுதியில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய 18 மாத கைக்கு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், நிலத்தகராறு காரணமாக, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் அனல் பறந்து கொண்டு இருந்தது. மேலும் இந்த வாக்குவாதம் நேரம் செல்ல, செல்ல கைகலப்பாக மாறியது.

இந்த நிலையில், அந்த தாயின் அலட்சியம் காரணமாக, 18 மாத கைக்குழந்தை தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த கைக்குழந்தை உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு, இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் எதிர் தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதாக உயிரிழந்த கை குழந்தையின் தந்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு கைக்கு குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பேசியிருக்கும் ஜெகனாபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் நிலத்தகராறில் 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அந்த பகுதியில் இருந்த இந்த பெண், தன்னுடைய 18 மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டவாறு சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. கை குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, தகராறு செய்த எதிர் தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளை வைத்து தாக்கியதாக தெரிவித்திருக்கிறார்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள். குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரின் அடையாளங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. உயிரிழந்த கைக்குழந்தையை கைப்பற்றிய சூழ்நிலையில், தன்னுடைய அடுத்த கட்ட விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Next Post

கடலூரில் கொடூரம்…! ஜாமினில் வெளிவந்த கொலை குற்றவாளி படுகொலை….!

Wed Jan 11 , 2023
கடலூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த எலி என்ற கிருஷ்ணமூர்த்தி இந்த நிலையில், ஜோசப்( 18) என்ற இளைஞருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண்ணுடன் பேசி பழகுவது குறித்து இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுடன் பேசிய வீடியோவை டிக் டாக்கில் பதிவிடுவது குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் […]

You May Like