மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை அடுத்துள்ளது கஜோல். இதன் அருகே இருக்கும் கிராமத்தில் பங்கின் சந்திர ராய் என்பவர் வசித்து வருகிறார். 81 வயது முதியவரான இவர், அங்கே தனியாக வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அதில் 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று அந்த 4 வயது குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்ததால் குழந்தையை சரி வர கவனிக்கவில்லை. இதையறிந்த பங்கின் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர், குழந்தையிடம் விளையாடியுள்ளார். பின்னர் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த குழந்தை மறுத்ததும், சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் குழந்தையும் முதியவருடன் சென்றுள்ளார். அப்போது அவர், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை அவரது வீட்டு வாசலிலே கொண்டு வந்து விட்டுள்ளார். சில நிமிடங்களிலே சிறுமி கதறி அழுதுள்ளார். பின்னர் அவரது பெற்றோர் விசாரிக்கையில், தனது அந்தரங்க பகுதியை காண்பித்து, வலிக்கிறது என்றுள்ளார் அந்த சிறுமி. இதையடுத்து, பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், அந்த 81 வயது முதியவர் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த 4 வயது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.