சிங்கிள் பேரண்ட் எனும் ஒற்றைப் பெற்றோர் என்பது சவாலான காரியம்தான். தன் துணையின்றி தனியாகக் குழந்தையை வளர்க்கும் ஒரு ஆணோ, பெண்ணோ குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள். கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டாலோ, இருவரது உறவு முறிந்துவிட்டாலோ ஒற்றைப் பெற்றோரால் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன. திருமணம் செய்துகொள்ளாதவர்களால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளும் இதில் அடங்கும்.
பெண்ணின்றி ஒரு ஆண் மட்டும் குழந்தையை வளர்த்தால் அவன் தந்தையாக மட்டுமின்றி அந்த குழந்தைக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். தாய், தந்தை இருவரின் பணிகளையும் ஒருவரே செய்ய வேண்டும். ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் பல. இருப்பினும் இங்கு ஒரு அப்பா, தனது மக்களுக்காகத் தகுதியான மகிழ்ச்சியைக் கொடுக்க மிகவும் மனதைக் கவரும் செயலைச் செய்துள்ளார்.
தாய்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்படுகிறது. ஒரு ஒற்றை தந்தை, தனது மகளின் பள்ளியில் அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக “அம்மா” போல் உடையணிந்து வந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் பரவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
“ஜோ” என்று அழைக்கப்படும் 48 வயதான பிரட்சயா ததீபு, தனது மகள் படிக்கும் பள்ளியில் அன்னையர் தினத்தை ஒட்டி மற்ற பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், செக்கு உடை மற்றும் விக் அணிந்து அவரது குழந்தைக்கு அம்மா போல் வேஷம் போட்டு வந்தார். அவரை பார்த்த டீனேஜ் மகள் “கிரீம்” முதலில் அவர் முன் குனிந்து பின் அவரை இறுக அணைத்துக்கொள்கிறாள். பிறகு இருவரும் தனது அன்பை முத்தங்கள் மூலம் பகிர்கிறார்கள்.
ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்த ஜோ, “அன்னையர் தினம் வந்துவிட்டது. உங்களுக்காக ஒரு ‘அம்மா’ நான் இருக்க முடியும்” என்று எழுதினார். இந்த வீடியோ வைரலான பிறகு, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜோ, தனது மகள் க்ரீம், ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும், தான் அவளை ஒரே அப்பாவாக வளர்த்ததாகவும், மேலும் நான் அவளை என் சொந்த உயிரியல் குழந்தையைப் போல நேசிக்கிறேன், என் பெண்ணை கவனித்துக் கொள்வதற்காக அப்பா மற்றும் அம்மாவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறினார்.
நம்பமுடியாத செயல் நிச்சயமாக இந்த உலகில் உள்ள அனைத்து ஒற்றை பெற்றோருக்கும் பின்பற்ற ஒரு எடுத்துக்காட்டு. இந்த சிறிய உணர்ச்சி மற்றும் அன்பின் செயல்கள் தான் இந்த உலகத்தை வாழ அழகான இடமாக மாற்றுகிறது.
video link: https://www.instagram.com/p/Cv9jzBbRRVm/?utm_source=ig_embed&ig_rid=581b0da3-44f2-49bf-9238-9b01094cfae1