தேசிய நெடுஞ்சாலையில் அதன் நீளத்தைப் பொருட்படுத்தாமல் பொதுவாக 50-60 கி.மீ இடைவெளியில் நிறுத்தப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாக ஒப்பந்ததாரர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 2021-22 ஆண்டில் 930 ஆம்புலன்ஸ், 2022-23 ஆண்டில் 1003 ஆம்புலன்ஸ், 2023-24 ஆண்டில் 1074 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுங்கச்சாவடிகள் அல்லது விபத்து நிகழக்கூடிய இடங்களில் நிறுத்தப்படுகின்றன. பொதுவாக, தேசிய நெடுஞ்சாலையில் அதன் நீளத்தைப் பொருட்படுத்தாமல் குறைந்தபட்சம் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுவாக 50-60 கி.மீ இடைவெளியில் நிறுத்தப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள மருத்துவ உபகரணங்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை கள அலுவலகங்களும், மேற்பார்வை ஆலோசகர்களும் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர்.
சாலை பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு தணிக்கையாளர்கள் மூலம் விரிவான திட்ட அறிக்கையுடன் சாலை பாதுகாப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 22.09.2022 முதல் தற்காலிக பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதற்கான பாதுகாப்புப் பணிகளை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திறந்தவெளிகள், சந்திப்புகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்ட நடைபாதைகள், தேசிய நெடுஞ்சாலைகளின் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு விளக்குகள் ஆகியவற்றில் பாதசாரிகளின் அடையாளங்கள் குறிக்கப்படுகின்றன என மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.