இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய காற்றினை சுவாசிக்கும் விதமாக ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த புதிய தொழில் நிறுவனம் தயாரித்துள்ள, மாசு எதிர்ப்பு தலைக்கவசம், இருசக்கர வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுகிறது. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டில், புளூடூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தொடக்க நிதியை பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் தொழில்நுட்பப் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் தயாரிப்பதில் முன்னணியிலுள்ள நிறுவனங்களுடன், வணிக அடிப்படையிலான ஒப்பந்தங்களில், இந்த புதிய தொழில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. குளிர்காலங்களில் தலைநகரில் ஏற்படும் காற்று மாசு காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்ந்து, இந்த ஹெல்மெட்களை ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.