ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் கணக்கில்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறனர். இந்நிலையில் தங்க நகைகள், ஏராளமான பணம், சில்லறை காசு என காணிக்கையாக உண்டியலில் செலுத்து மன நிம்மதியுடன் வணங்கி வருகின்றனர்.
அவ்வாறு உண்டியலில் செலுத்தப்படும் அனைத்து காணிக்கைகளையும் எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் ஷிப்ட் முறையில் அமைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இப்படி உண்டியலில் சேரும் பணத்தை எண்ணும் முறையை பரகாமணி சேவை என்று அழைப்பதாக கூறுகின்றனர்.
பரகாமணி சேவையில் கடந்த 23ம் தேதி ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மதியம் 2.30 மணி அளவில் தனது பணியை முடிந்துவிட்டு வெளியே செல்ல இருந்த நிலையில், அவர் அணிந்திருந்த மாஸ்க் சற்று வித்தியாசமாகவும், சந்தேகத்தை கிளப்பும் விதமாக இருந்ததால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது திடுக்கிடும் நிகழ்ச்சியாக அவர் அணிந்திருந்த மாஸ்க்கில் பணத்தை மறைத்து அவர் எடுத்து செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 47 இரண்டாயிரம் தாள்களை மாஸ்க்கில் பதுக்கு அவர் எடுத்து சென்றுள்ளார் என்பது தெரிய உள்வந்தது. மொத்தமாக ரூ.94 ஆயிரம் ரூபாய்கள் திருட முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்துஅவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது தான் திடுக்கிடும் மற்றொரு தகவலும் தெறிய வந்தது. இவர் ஏற்கனவே கோவிலில் பிரசாத லட்டு வழங்கும் டோக்கன்களை திருடி அதனை விற்று, பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.