தமிழகத்தில் விருதுநகர் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதில், மூன்று பேர் பலியாக உள்ளனர். உயிரிழந்த மூன்று தொழிலாளர்களும் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தை போலீசார் உறுதிபடுத்தினர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தர்மபுரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து நடந்த இடத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ் மகேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.
Read more : ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்த இடைக்கால தடை..!! – உயர் நீதிமன்ற மதுரை கிளை