fbpx

’ஒரு மணி நேர பயணம் இனி 15 நிமிடங்கள் மட்டுமே’..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப் வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக தரையில் சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். பர்வத் மாலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 200 ரோப்வே சாலைகள் அமைக்கப்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அதிக செலவு கொண்டது என்பதால், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக, மலைப் பாங்கான இடங்களில் சுற்றுலாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் ரோப் வே சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து எளிதாக அமைவதுடன் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். ஒட்டுமொத்தமாக 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் வே சாலைகள் அமைக்கப்படும். நாட்டில் 30% பகுதிகள் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளன. அங்கு சாதாரண சாலை மற்றும் ரயில் பாதைகள் உருவாக்குவது மிக கடினமான காரியம். அந்த இடங்களில் ரோப்வே மூலம் சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முதல் நகர்புற ரோப்வே சாலை வாரணாசியில் அமையவுள்ளது. 4 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரோப் வே திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரமாக இருக்கும் பயண தூரம் 15 நிமிடங்களாக குறையும்.

Chella

Next Post

தாய்மார்களே.! குழந்தைகளுக்கு பால் பாட்டிலில் பால் கொடுக்குறீங்களா.? மருத்துவரின் அறிவுரை என்ன தெரியுமா.!?

Thu Jan 25 , 2024
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதமாகும் வரை தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் தரக்கூடாது. பிறந்த குழந்தைகளின் உடல் உள்உறுப்புகள் ஆறு மாதம் வரை முழுமையாக வளர்ச்சி அடையாது. அப்படியிருக்க தாய்ப்பாலை தவிர வேறு ஏதாவது தரும்போது குழந்தைகளுக்கு ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனாலையே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தரக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் தாய்ப்பாலின் […]

You May Like