துருக்கியின் முக்லா பகுதியில் பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு என்ற இடத்திற்கு ஹகன் அய்சல் (41) என்பவர் தனது மனைவி செம்ரா அய்சலுடன் (32) சென்றிருக்கிறார். செம்ரா அய்சல் 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
இந்த சூழலில், சுற்றுலாவுக்கு இருவரும் சென்றிருந்த நிலையில் ஹகன், செம்ராவை 1,000 அடி உயரத்திற்கு கூட்டி சென்று செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கூறி, ஆசையாக அழைத்துச் சென்றிருக்கிறார்.
அதனை தொடர்ந்து திட்டம் போட்டு யாவரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு , நிறைமாத கர்ப்பிணியான மனைவி செம்ராவை 1,000 அடி உயர மலையில் இருந்து கீழே தள்ளி ஹகன் கொன்றிருக்கிறார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஹகன் அய்சலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . செம்ரா சாதாரணமாகவே உயரத்தை கண்டால் பயம் என்பது தெரிந்த கொண்ட கணவர் அய்சல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொன்றிருக்கிறார் என்பது ஊர்ஜிதமானது.
விசாரணையில் ஏன் இந்த கொலை செய்தீர்கள் என்பதற்கு ஹகன் அளித்த பதிலை கேட்டு நீதிபதிகளே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏனெனில் மனைவி செம்ரா பெயரில் இன்ஷுரன்ஸ் பணம் 25 ஆயிரம் டாலர் அதாவது 20 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இருந்தது.
அதனை பெறுவதற்காகவே ஹகன் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் ஹகன் அய்சல் விடுதலையாக வேண்டுமானால் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.